பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர் - கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்தாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்றியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தமது எக்‍ஸ் தள பக்‍கத்தில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் கூட்டணி அரசின் தலைவரான உமர் அப்துல்லாவிற்கும் வாழ்த்துக்களை கார்கே தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளதாகவும் கூறினார்.

Night
Day