பாஜகவில் இணைந்தார் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான கருணாகரனின் மகள் பத்மாஜா வேணுகோபால் காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில குழு பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர், திடீரென காங்கிரஸில் இருந்து விலகிய பாஜக மாநில தலைவர் சுரேந்திரனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஏ.கே.ஆன்டனியின் மகன் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது பத்மஜாவும் பாஜகவில் இணைந்துள்ளார். 

Night
Day