பாஜக கூட்டணியில்தான் நீடிக்கிறேன் - சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார். டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுபோன்ற தேர்தலை இதுவரை வரலாற்றில் தான் பார்த்ததில்லை எனவும், வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்துவிட்டு சென்றதாகவும் கூறினார். 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை தெலுங்கு தேசம் கட்சி பெற்றுள்ளதாகவும், இந்த வெற்றி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்தார். தங்களை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை கூட பெறவில்லை என குறிப்பிட்டு பேசிய அவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் அரசு நிர்வாகம் சரியில்லை என விமர்சித்த சந்திரபாபு நாயுடு, மாநிலத்தை விட்டு வெளியே இருந்தவர்கள் கூட இந்த ஆட்சியை மாற்ற வேண்டுமென விரும்பியதாக தெரிவித்தார். பல்வேறு கடுமையான நெருக்கடிகளை கடந்துவந்துள்ளதாக பேசிய சந்திரபாபு நாயுடு, இத்தனை நெருக்கடியிலும் தன்னை மக்கள் காப்பாற்றியுள்ளதாக தெரிவித்தார். மேலும் மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

Night
Day