பாஜக தலைவர்கள் தவறான செயல்களை செய்ய லைசன்ஸ் பெற்றுள்ளனர் - காங்கிரஸ் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக கொடி கட்டிய காருக்குள் 2 பெண்களுடன் தனிமையில் இருந்த இளைஞரின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கலிகா ஹவேலி உணவகத்தின் வெளியே பாஜக கொடி கட்டிய கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த காரில், ஆண் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் தனிமையில் இருந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் கட்சி, பாஜக தலைவர்கள் அனைத்து தவறான செயல்களையும் செய்ய லைசன்ஸ் பெற்றுள்ளனர் என்றும், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாராலும் அவர்களை தடுக்க முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

Night
Day