பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நேற்றைய நிகழ்வில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை குடியரசுத் தலைவருமான எல்.கே.அத்வானி பங்கேற்கவில்லை. இந்நிலையில், அவரது இல்லத்திற்கே சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த, விருது வழங்கும் நிகழ்வின் போது பிரதமர் நரேந்திர மோடி, ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Night
Day