பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக தேசிய தலைவர் குறித்த அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகுமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி நட்டா உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதில் அக்கட்சி தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்திற்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், தேசிய தலைவர் தேர்வு குறித்த ஆலோசனையில் கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகவும், மே முதல் வாரத்தில் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகுமென பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, முன்னதாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான பாஜக தலைவர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாக கூடும் எனவும் கூறப்படுகிறது.

Night
Day