எழுத்தின் அளவு: அ+ அ- அ
யாரையும், எதைப் பற்றியும் சிந்திக்காமல் பாஜக மமதையுடன் செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும், கடவுளுக்கு நிகரானவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளார். யாரையும், எதைப் பற்றியும் சிந்திக்காமல் பாஜக மமதையுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், அம்பேத்கரின் அரசியலமைப்பு இல்லையென்றால், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள், பழங்குடியினர் ஆகியோரை இந்த உலகில் வாழ அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அம்பேத்கர் மீதான அமித் ஷாவின் கருத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.