பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், இது சாதாரண தேர்தல் அல்ல என்றும் இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக முதியவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அனுபவித்த சிரமங்களை நினைவில் வைத்து கொள்வார்கள் எனக் கூறியுள்ளார். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நமது பணி என்பது இந்த தேர்தல் மூலம் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day