பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். 

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் பட்டியல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. 

இதன்படி பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே அறிவித்தார். 

முதல் பட்டியலில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் 34 பேர், முன்னாள் முதல்வர்கள் இருவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 28 பெண் வேட்பாளர்கள் என்றும், 47 இளைஞர்களுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 27 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள், 18 பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்‍கப்பட்டுள்ளது.

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். 

அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜு போட்டியிடுகிறார்.

இதேபோன்று கேரள மாநிலம் திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜ்நாத் சிங் - லக்னோ தொகுதியிலும் , அர்ஜுன் முண்டா - குந்தி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

வி.முரளிதரன் - அட்டிங்கல் தொகுதியிலும், ராஜீவ் சந்திரசேகர் - திருவனந்தபுரம் தொகுதியிலும், 

ஜோதிராதித்யா சிந்தியா -  குனா தொகுதியிலும் போட்டியிடுவதாக வினோத் தாவ்டே தெரிவித்தார். 

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சர்பானந்தா சோனாவால் திப்ரூகர் மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  விதிஷா மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

Night
Day