பாலகோட் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அளித்தோம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலகோட் வான்வழித்தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் தெரிவித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 2வது கட்ட தேர்தலை முன்னிட்டு 2 நாட்களாக கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று பாகல்கோட்டை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு முதுகில் இருந்து தாக்குதல் நடத்துவதில் நம்பிக்கை இல்லை என்றும், வெளிப்படையாக நேருக்கு நேர் தான் போராடுவேன் என்றும் கூறினார். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் முன்பு பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

Night
Day