பாலி நரிமன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் மறைவுக்கு பிரதமர் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை பெற்ற பாலி நரிமன், இந்திய வழக்கறிஞர்களின் சங்கத் தலைவராக 19 ஆண்டுகளாக இருந்து வந்தார். 70 ஆண்டிற்கும் மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட பாலி நரிமன் 1972-ம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வயதுமூப்பு காரணமாக பாலி நரிமன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சாதாரண குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் பாலி நரிமன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

Night
Day