பாஸ்டேக் செயலியில் 2 புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுங்கச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் பாஸ்டேக் செயலியில் மத்திய அரசின் அமைப்பான இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 


அதன்படி, சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக செயலி பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும் எனவும், ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலும் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும் என கூறியுள்ளது. நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றால் அத்தைகைய வாகனத்திற்கு சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Night
Day