பிப்.6ம் தேதி உத்தரண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட வரைவு மசோதா தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் 6-ம் தேதி தொடங்கும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்ட மசோதா முன்வரைவை ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையிலான குழு நேற்று மாநில அரசிடம் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி,  சட்டப்பேரவையில் இந்த வரைவு மசோதா விவாதத்துக்காக முன்வைக்கப்பட்டு பின்னர் சட்டம் அமலாகும் என்றார். பாஜக சொன்னது போலவே ஆட்சிக்கு வந்ததும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் கட்சித் தலைமையின் உந்துதலால்தான் இது சாத்தியமாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Night
Day