எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் சிறப்பு புலனாய்வு காவலில் விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில் பலதரப்பட்ட அழுத்தம் மற்றும் முன்னாள் பிரதமரும், தாத்தாவுமான தேவகவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா திரும்ப கூறினார். இந்நிலையில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நள்ளிரவு இந்தியா திரும்பினார். அவரை விமான நிலையத்தில் வைத்து காவல்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். கைதான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வலை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தன் மீது எந்த எந்த தவறும் இல்லை என்றும் இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தரப்பு சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் 6 நாள் சிறப்பு புலனாய்வு காவலில் விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டனர்.மேலும் , பிரஜ்வல் ரேவண்ணாவை வழக்கறிஞர்கள் நாள்தோறும் காலை 9 முதல் 10:30 மணி வரை சந்தித்து வழக்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.