பிரதமரின் அருணாச்சலபிரதேச பயணம் குறித்த சீனாவின் கருத்து நிராகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணம் குறித்த சீனாவின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த வாரம் அருணாச்சால பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு, 13 ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்ட சேலா சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இதற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங்-வென்பின், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி, அதற்குள் பிரதமர் மோடி அனுமதியின்றி பயணித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இதனிடையே சீனாவின் இந்த கருத்தை இந்தியா நிராகரிப்பதாகவும், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும் இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Night
Day