பிரதமர் தலைமையில் நடிகர் சுரேஷ்கோபி மகள் திருமணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமணம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவுக்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் குருவாயூர் கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களுக்கு மாலைகளை எடுத்து கொடுத்து அவர்களை ஆசிர்வதித்தார். முன்னதாக, கோயிலில் நடந்த வேறு மணமக்களுக்கு பரிசுகளை கொடுத்து வாழ்த்தினார். இதில், நடிகர் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Night
Day