எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமேஸ்வரத்திற்கு வருகை தருவதையொட்டி, ராமநாத சுவாமி கோயிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இதற்காக பிரதமரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று மாலையில் இருந்து நாளை வரை ராமேஸ்வரம் தீவு பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமர் வருகையின் போது 2 மணி நேரம் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்த பிறகு, பிரதமர் மோடி ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக, பக்தர்கள், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை என திருக்கோயில் நிர்வாக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் மூன்று 30 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.