பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் அளித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும், இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்தும் பிரதமர் மோடியிடம், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் அளித்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய மறு சீரமைப்பு பணிகள் குறித்தும் பிரதமரிடம், ஆளுநர் விளக்கினார். மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பிரதமர் மோடியை சந்தித்து நேற்று விளக்கம் அளித்து இருந்த நிலையில், இன்று கேரள ஆளுநர், பிரதமரை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day