பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து முக்கிய ஆலேசானை நடத்தினர்.  

கடந்த 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. பாகிஸ்தானும் எடுத்துள்ள பதில் நடவடிக்கைகளால், இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் பிரதமரை சந்தித்தார். இதில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசியதாகவும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், ராணுவத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு விரிவாக விளக்கியதாக தகவல் வெளியானது.
 

Night
Day