பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை தகவல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தாய்லாந்து மற்றும் இலங்கையில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் ஷினாவத்ரா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தாய்லாந்தில் ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 4ம் தேதி பிரதமர் மோடி, தாய்லாந்தில் நடைபெற உள்ள 6வது BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதனை முடித்துக் கொண்டு, ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்‍க அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு நாடுகளிடையே முக்‍கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக எதிர்பார்க்‍கப்படுகிறது. 

Night
Day