பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா-ரஷ்யா இடையேயான 22வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா பயணிக்கவுள்ளார். 

2019-ம் ஆண்டு நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா பயணித்த நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் பயணிக்கவுள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர், மாலை ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைவார். பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் 22வது இந்திய ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாநாட்டில் பாதுகாப்பு, முதலீடு, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்பு வரும் 9ம் தேதி கிரெம்ளினில் உள்ள சிப்பாய் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி, மாஸ்கோவில் உள்ள கண்காட்சியையும் பார்வையிடுகிறார். 

Night
Day