பிரதமர் மோடி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களுக்கு பதிலளிக்கும்படி பாஜக, காங்கிரஸ் தலைமைக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மற்றும் இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து வெறுப்பு பேச்சுக்களை பேசியதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது ராகுல் காந்தி தவறான தகவல்களை தெரிவித்ததாகக்கூறி பல புகார்கள் அளிக்கப்பட்டன. இத்தகைய புகார்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் சார்பில் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நட்சத்திர பரப்புரையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் அக்கட்சியின் தலைவர்களே பொறுப்பாவார்கள் என குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மீதான புகார்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா-வுக்கும், ராகுல் காந்தி மீதான புகாருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர் பதவிகளில் உள்ளவர்களால் பிரச்சாரங்களில் கூறப்படும் தவறான கருத்துகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை எனவும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Night
Day