பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் போசானி கிருஷ்ண முரளி கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி வந்த நகைச்சுவை நடிகர் போசானி கிருஷ்ண முரளியை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


தெலுங்கு திரையுலக நகைச்சுவை நடிகரான போசானி கிருஷ்ண முரளி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளராக உள்ளார். இவர் ஜெகன்மோகன் ஆட்சியில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை இழிவாக பேசி வந்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நகைச்சுவை நடிகர் போசானி மீது மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ஓபிலவாரிபள்ளே காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் ஹைதராபாத்தில் நேற்று இரவு கைது செய்தனர்

Night
Day