பிரேன் சிங் வீடு தாக்கப்படும் என மெய்தேயி மக்கள் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயுதமேந்திய குக்கி குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கும் மணிப்பூர் அரசுக்கும் 24 மணி நேர கெடு விதித்துள்ள மெய்தெய் மக்கள், தவறினால் முதலமைச்சர் பிரேன் சிங்கின் வீடு தாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். குக்கி குழுவால் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஏழு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவை முடக்கப்பட்டிருந்தாலும் கலவரத்தை அடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மற்றும் தகவல் தொடர்பு இல்லாமை மக்களின் சீற்றத்தை அதிகரித்துள்ளது. திருப்திகரமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதற்கான விளைவை அரசு சந்திக்கும் என மெய்தெய் குழுக்கள் எச்சரித்துள்ளன.

Night
Day