பீகாரில் நாளந்தா பல்லைக்கழகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநிலம் ராஜ்கீரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த 5ம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்டது நாளாந்த பல்கலைகழகம். பன்னாட்டு அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்ட நாளாந்தா பல்கலைக்கழகம் 800 ஆண்டுகளுக்கு முன்பு கில்ஜி படையெடுப்பால் தீக்கிரையாக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகள் பழமையான இந்த பல்கலைக்கழகம் தற்போது மீண்டும் புதியதாக கட்டப்பட்டுள்ளது.

நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பல்கலைக் கழக வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 

ஆயிரத்து 749 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய வளாகத்திற்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 17 நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். 

இதனிடையே, பல்கலைக்கழ வளாகம் திறப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள் என்றும், நாளந்தா பல்கலைக்கழகம் கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இளைஞர்களின் கல்வி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த பல்கலைக்கழகம் நீண்ட தூரம் செல்லும் என்றும் பதிவிட்டுள்ளார்.


Night
Day