பீகார் சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவராக லாலு மனைவி தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநில சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரீய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர். இதனிடையே கடந்த மாதம் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், காலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அன்று மாலையே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். துணை முதலமைச்சராக இருந்த தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்தநிலையில், தற்போது அவரது தாயார் ராப்ரி தேவி மேலவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day