பீகார் : புதிதாய் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி, பலர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாலத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மரிச்சா பகுதியில் புதியதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. வழக்கபோல் ஊழியர்கள் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிப்பாடுகளில் சிக்கி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இடிந்து விழுந்த பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day