பீகார் : லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் 22 தலைவர்கள் விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து  22 முக்கிய தலைவர்கள் ஒரே நேரத்தில் வெளியேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரேணு குஷ்வாஹா, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ்குமார், மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ் டாங்கி ஆகியோர் கட்சியில் இருந்து விலகியவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். உழைப்பவர்களை விட்டு விட்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இப்போது நாட்டைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ள  இந்தியா கூட்டணியை ஆதரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Night
Day