புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை - குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை இன்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கடவுளின் தேசம் என போற்றப்படும் கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் தை முதல் நாளான இன்று மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டுள்ள திருவாபாரணங்கள், இன்று மாலை சந்நிதானத்தை வந்தடையும் என்பதால் சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திதானம் வரும் ஆபரணங்களை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஆகியோர் பெற்றுக் கொள்வர். மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டவுடன், பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

மகர ஜோதி தரிசனத்தை காண கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், தேவசம் போர்டு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார், சபரிமலை மற்றும் பம்பை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day