புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் ராஜீவ் குமாருக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்படுவதாகவும், நாளை அவர் பதவியேற்கவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்தாண்டு பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், 2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தல்கள், 2027-ல் நடைபெற உள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day