புதிய நீதிதேவதை சிலைக்கு கபில் சிபில் தலைமையிலான வழக்கறி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதிதேவதை சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தலைமையிலான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தை மாற்றுவது, நீதி தேவதை சிலையை மாற்றுவது போன்ற செயல்கள் ஒரு தலைப்பட்சமாக உள்ளதாகவும் சம பங்குதாரர்கள் என்ற வகையில் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. நீதி நிர்வாகத்தில் இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டபோதும், இதன் பின்னணியில் உள்ள காரணம் விளக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும்,முன்னாள் நீதிபதிகள் நூலகத்தில் வழக்கறிஞர்கள் சங்க எதிர்ப்பையும் மீறி அருங்காட்சியகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

Night
Day