இந்தியா
உத்தர பிரதேசம் - சம்பல் மாவட்டத்தில் இணைய சேவை துண்டிப்பு
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகர் வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக அ...
நம் நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவியேற்ற மனோஜ் பாண்டேயின் பதவி காலம் கடந்த மே 31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மனோஜ் பாண்டே பதவி காலம் வருகிற 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது ராணுவ துணைத்தளபதியாக உள்ள உபேந்திரா திவேதி, வருகிற 30-ம் தேதி தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகர் வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக அ...
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள...