புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய வருமான வரி சட்ட மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். 

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டம் கடந்த 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட நிலையில், இவற்றில் அவ்வப்போது பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அதன்படி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த பின் பேசிய நிர்மலா சீதாராமன், சிக்கலின்றி வருமான வரியை தாக்கல் செய்ய புதிய மசோதா வழிவகை செய்யும் எனவும் புதிய மசோதாவில் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். இந்த மசோதா ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படடது.

Night
Day