புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.

காமராஜர் சாலையை ஆக்கிரமித்து சாலையோர வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், தற்போது பிரசார வாகனங்களும் சாலைகளை பயன்படுத்துவதால் மக்கள் நடமாடவே முடியாத நிலை உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புகாரளித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் காமராஜர் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, மீண்டும் சாலையோரத்தில் கடைகள் வைத்தால் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமென எச்சரித்து சென்றனர்.

Night
Day