புதுச்சேரியில் சுவர் இடிந்து விபத்து - பலி 5 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. 

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட ராமானுஜம் நகர் முதல் வசந்த நகர் இடையிலான பிரதான வாய்க்காலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் திருவண்ணாமலை பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 16 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில், வசந்தம் நகர் மூன்றாவது வீதியில் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்ற போது, எதிர்பாராத விதமாக வாய்க்காலை ஒட்டியிருந்த மின்துறைக்கு சொந்தமான 7-அடி உயர மதில் சுவர் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, வாய்க்காலில் இருந்து தூர் வாரிய மண்ணை மதில் சுவர் அருகே கொட்டியதும், பாரம் தாங்காமல் மதில் சுவர் இடிந்து விழுந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீயணைப்பு துறை மற்றும் முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day