புதுச்சேரியில் வாய்க்கால் பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீடு இடிந்த விவகாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் இடிந்து விழுந்த வீட்டிற்கு பதிலாக அரசு சார்பில் புதிய வீடு கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. ஆட்டுப்பட்டி அருகே கடந்த மாதம் உப்பனாறு வாய்க்கால் பக்கவாட்டு சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது, அதன் அருகில் கட்டப்பட்டிருந்த 3 மாடி வீடு இடிந்து விழுந்தது. கடன் வாங்கி கட்டிய கட்டடம் புதுமனை புகுவிழா நடத்துவதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் புதுச்சேரி அரசு தங்களுக்கு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதே இடத்தில், முதல் தளம் வரை கட்டிக்கொடுக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார். இந்நிலையில், இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கி உள்ளனர்.

varient
Night
Day