புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெறும் 35-வது மலர், காய், கனி கண்காட்சி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் வேளாண்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் 35-வது மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 


இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக கண்காட்சியில் திராட்சையில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர், ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரயில் என்ஜின் போன்றவை இடம் பெற்றன. இக்கண்காட்சியை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Night
Day