புதுச்சேரி சட்டப்பேரவை - இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. அப்போது, புதுச்சேரியை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், பெஞ்சல் புயலுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டி பேரவையில் இருந்து இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார். தவறான தகவல்களை பேரவையில் தெரிவிக்கக்கூடாது என எதிர்க்கட்சிகளை சாடிய அவர், மத்திய அரசு ஃபெஞ்சல் புயலுக்காக முதற்கட்ட நிவாரணமாக 61 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக கூறினார்.

Night
Day