புதுச்சேரி சாரம் பகுதியில் விஷவாயுக்கசிவு பரவுவதாக அச்சம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே கழிவறையில் தம்பதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே சாரம் பகுதியை சேர்ந்த பவானி என்பவர், தனது வீட்டின் கழிவறைக்கு சென்றபோது, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை, கண்ட அவரது கணவர் பழனி, பவானியை தூக்க சென்றுள்ளார். அப்போது, அவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 10ம் தேதி புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கியதில், அதே பகுதியை சேர்ந்த தாய், மகள் உட்பட 15 வயது சிறுமி செல்வராணி ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும், விஷவாயு பரவிய கழிவறை அமைந்த பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day