புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் உள்ள பிரபல ஜிப்மர் மருத்துவமனைக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த காவலர்களும், வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டனர்.  

Night
Day