புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக-வுக்‍கு ஒதுக்‍கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

புதுச்சேரிக்‍கு ஒரே ஒரு மக்‍களவைத் தொகுதி மட்டுமே உள்ளது. இந்தத் தொகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளதாக புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதலமைச்சருமான ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தொகுதிக்‍கான வேட்பாளர் யார்? என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் என்றும், தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வருவார் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Night
Day