எழுத்தின் அளவு: அ+ அ- அ
மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி, 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் 2016-17 ம் கல்வியாண்டில், விதிகளுக்கு முரணாக 26 மாணவர்களை சேர்த்துள்ளதாக கூறி, அந்த மாணவர்களை விடுவித்து, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படிப்பை முடித்த 26 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், அவர்களுக்கான படிப்பு நிறைவு சான்றை வழங்க வேண்டும் என்றும் மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டார். மேலும், புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.