புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுகளுக்கு அதிகாரமில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புல்டோசர் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

வன்முறை, கலவரம் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கை வட மாநிலங்களில் காணப்பட்ட நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, குற்றச்செயலில் ஈடுபட்டவரின் வீட்டை இடிப்பது சட்டவிரோம் எனவும், நீதித்துறையின் அதிகாரத்தை அரசு அதிகாரிகள் எவ்வாறு கையில் எடுக்க முடியும் என கேள்வி எழுப்பி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

Night
Day