பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில், நேற்று அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்சிட்டி மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பெங்களூருவில், அமெரிக்க துணை தூதரகம் திறக்‍கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நமது தூதரகம் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவுக்‍கான அமெரிக்கா தூதர் எரிக் கார்சிட்டி, பெங்களூருவில் துணை தூதரகம் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் விரைவில் விசா சேவை அளிக்கும் பணி துவங்கும் எனவும் குறிப்பிட்டார். 

Night
Day