பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு - மக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் நாடு முழுவதும் வறட்சி ஏற்படும் நிலையில், பெங்களூருவில் தற்போதே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரின்றி அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பணத்தை செலவழித்து தண்ணீர் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவற்றை பெற முடியாமல் அல்லாடுகின்றனர். இதுகுறித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தண்ணீர் பஞ்சம் தன்னையும் வாட்டியுள்ளதாகவும், தனது வீட்டின் போர்வெல் உட்பட பெங்களூருவில் உள்ள அனைத்து போர்வெல்களிலிலும் தண்ணீரின்றி வறண்டு விட்டதாகவும் கூறியுள்ளார். 

Night
Day