பெங்களூருவில் குடிநீர் வீணடிப்பு - 22 குடும்பத்துக்கு தலா ரூ.5000 அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடிநீரை வீணடித்த 22 குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், கார்களை கழுவுதல், பூங்காவுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட அவசியத் தேவை இல்லாத வகையில் குடிநீரை வீணடித்த, 22 குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம், சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டது. மற்றொரு இடத்தில், அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானத்துக்கு பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு குடிநீரை பயன்படுத்தக்கூடாது என்றும், நாள் ஒன்றுக்கு சுமார் 500 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் பெங்களூர் குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

Night
Day