பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பெங்களுருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோட்டையாக விளங்கும் பெங்களுருவில் சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்கள் அன்றாட தண்ணீர் தேவைக்காக அல்லாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மேற்கு பருவமழை பொய்த்து போனதால் வழக்கத்தை விட முன்னதாகவே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு பெங்களுரு வாசிகள் தவித்து வருகின்றனர். காவிரி படுகையிலும் போதிய நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதளத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

Night
Day