பெங்களூருவில் தொழுகையின்போது இடையூறு - தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழுகையின்போது அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கச்செய்ததாகக்கூறி செல்போன் கடைக்காரரை தாக்கிய இஸ்லாமியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தண்ணா லேஅவுட் அருகே தொழுகை நேரத்தின் போது செல்போன் கடைக்காரர் ஒருவர் சத்தமாக பாடலை ஒலிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்குவந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், பாடலை இவ்வளவு சத்தத்துடன் ஒலிக்கவைத்தது தொடர்பாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் செல்போன் கடைகாரரை இஸ்லாமிய இளைஞர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கினர். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இஸ்லாமிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Night
Day