பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு சம்பவம் : தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேரை அதிகாரிகள் தேடிவந்தனர். இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day