பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு சம்பவம் : கொல்கத்தாவில் போலி அடையாளங்களை காண்பித்து தங்கியிருந்த குற்றவாளிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட 2 பேர் கொல்கத்தாவில் தங்கும்விடுதி ஒன்றில் தங்கியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. பெங்களூரு சாலையில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் 1ம் தேதி சில நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் மாநில அரசு ஒப்படைத்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட 2 பேரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் இரண்டு பேரும் கொல்கத்தாவில் தங்கும் விடுதியில் போலி அடையாளத்தை காண்பித்து தங்கியிருந்து வந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது.

varient
Night
Day